கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை ஜூலை 21ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கதிர்காம முருகன் ஆலய உற்சவத்திற்கான அழைப்பை ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே, பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் இன்று கையளித்தார்.
ஆகஸ்ட் 3ம் திகதி வருடாந்த உற்சவம் நடத்தப்பட உள்ளதாகவும்
ஆகஸ்ட் 4 ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடத்தப்பட உள்ளதாகவும்
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அச்சுறுத்தல் காணப்படுகின்ற பின்னணியில் பெரஹர விழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்காதிருக்க ஏற்பாடு குழு தீர்மானித்துள்ளது என்றும் ஏனைய உற்சவங்கள் சுகாதாரம் முறையின் கீழ் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.