வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்கும் போது முகக்கவசம் அணிய வேண்டும்.


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதரும் மக்கள் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார். 

முக கவசம் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வரும் வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு முகக்கவசத்தை கழற்றி முகத்தை காண்பித்து பின்னர் முகக்கவசத்தை அணிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதரும் வாக்காளர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அவர் கூறியுள்ளார். 

வாக்களிக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் மேலும் வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அவர்களது அடையாள அட்டைகளை அதிகாரிகள் தமது கைகளால் பெற்றுக்கொள்ளாத அதேவேளை வாக்காளர்களினால் அதிகாரிகளுக்கு காண்பிக்க நடவடிக்கை எடுக்கப்பதாகவும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்