மிரிசவெட்டிய விகாராதிபதி சங்கைக்குரிய ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக்க தேரர் நேற்று ஜனாதிபதியை வாழ்த்திப் பேசியுள்ளார்.
“திடமான கொள்கையுடன், எல்லாவகையிலும் முழுமையான ஜனாதிபதி ஒருவர் நாட்டிற்கு கிடைத்தது மாபெரும் அதிர்ஷ்டம்” என்றும் ஞானதிலக்க தேரர் ஜனாதிபதியை பாராட்டியுள்ளார்.
நேற்றையதினம் ஜனாதிபதியின் பிறந்தநாளுக்கு ஆசிர்வாதம் வழங்கி, நேற்று நண்பகல் மிரிசவெட்டிய விகாரையில் நூறு தேரர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வின் பின்னர் விசேட அனுசாசன உரை ஆற்றியபோதே சங்கைக்குரிய ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக்க தேரர் இவ்வாறு பாராட்டி வாழ்த்தியுள்ளார்.
அதன் பின்னர் ஜனாதிபதி, வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன், அநுராதபுர புண்ணிய ஸ்தலத்திற்கு வருகை தந்த, அட்டமஸ்தானாதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச தேரரயும்
சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
அதன் பின்னர் - உடமலுவவிற்கு சென்று , புனித அரச மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசிகளையும் இறை அருளையும் பெற வேண்டிக்கொண்டுள்ளார்.