Sunday, June 28, 2020

பாடசாலைகள் முதற்கட்டமாக நாளை திறக்கப்படவுள்ளன



கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கையின் கீழ் முதற்கட்டமாக நாளை(திங்கட்கிழமை) பாடசாலைகள்  திறக்கப்படவுள்ளன.

பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை முகாமைத்துவம், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோருக்காக நாளைய தினம் பாடசாலைகள் திறக்கப்டவிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் தொற்றுநீக்கம் செய்தல், தூய்மைபடுத்துதல், பாடங்களுக்கான நேர அட்டவணை தயாரித்தல் போன்ற பணிகளுக்காக முதற்கட்டமாக நாளை பாடசாலைகள் திறக்கப்டவிருப்பதாகவும் மேலும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் அடுத்த மாதம் 6ஆம் திகதி தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய வகுப்புக்களை சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வது அவசியமாகும் எனவும் தரம் 10 மற்றும் 12 ஆகிய தரங்களில் கற்கும் மாணவர்கள் ஜூலை மாதம் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்படவிருக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!