Monday, June 22, 2020

12,000 புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்.



வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்திருந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 12,000 பேர் இதுவரையில் நாடு திரும்பியுள்ளனர்.

இதேபோன்று வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரையும் ஜூலை மாதத்திற்கு முன்னர் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

21 நாடுகளில் இருந்தவர்களே இவ்வாறு அழைத்துவரப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!