கொவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட நாடளாவிய ரீதியில் 1000 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் : தனிமை நிவாரணத் திட்டம்.இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கலாநிதி வி ஜனகன், “தனிமை நிவாரணத் திட்டத்தின்” கீழ் 1,000க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்களுக்கு முழு நிதியுதவி வழங்கும் புது திட்டத்தை அறிவித்துள்ளார். 

கொவிட்-19 தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் மாணவர்களின் தொடர் கல்விக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளை கருத்திற் கொண்டு  IDM Nations Campus மற்றும் ஜனகன் அறக்கட்டளை ஆகியவற்றால் மாணவர்களின் தொடர்ச்சியான கல்வி முயற்சிகளுக்கு தனது பங்களிப்பை வழங்கவும் முடிவு செய்துள்ளார் கலாநிதி வி ஜனகன். 

இதற்கமைய 1000 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தினை  அறிமுகப்படுத்தியுள்ளார்.


இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்ததோடு இந்த திட்டம் மாணவர்களிடையே சென்றடைய வேண்டுமென்ற கோரிக்கையினையும்  பத்திரிகையாளர்கள் மத்தியில் விடுத்துள்ளார்.

Scholarships for over 1000 Students across the country Affected by COVID-19 - Study in the "Isolation Relief Program"