கேரளாவைச் சேர்ந்தவர் பூர்ணா.இவர் தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து ‘கொடிவீரன், சவரக்கத்தி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கொச்சி மாவட்டம் மராடு காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது,தனக்கு அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் விடுத்ததாக நடிகை பூர்ணா அளித்த புகாரின் பேரில் தாம் வழக்கு பதிவு செய்து, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
விசாரணை முடிவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.