கொரோனா ஊரடங்குச் சட்ட காலத்தில் காவற்துறையினரால் கையகப்படுத்தப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் - 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் காவற்துறையினரால் கையகப்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.