Monday, June 8, 2020

கேரளாவில் வெடிமருந்து வைக்கப்பட்ட பழத்தை உண்டு யானை இறந்த அதிர்வலை ஓய்வதற்குள் இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் ஒரு கோர சம்பவம்.


இமாச்சல பிரதேசத்தில் வெடிமருந்து கலக்கப்பட்ட உணவுப்பொருள் ஒன்றை சினைப்பசு ஒன்று உண்டதில் அதன் வாய்ப்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 
கடந்த மே மாதம் 25ஆம் திகதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த சனிக்கிழமை அந்த மாட்டின் உரிமையாளர் காணொளி ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்ட பிறகே இதுகுறித்த தகவல் எல்லோருக்கும் தெரிய வந்துள்ளது.
இமாச்சலப் பிரதேச பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த குர்தியால் சிங் என்பவருக்கு சொந்தமான பசு மாடு, கடந்த மே மாதம் 25ஆம் திகதி அவரது வீட்டிற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த கோதுமை உருண்டையை சாப்பிட முற்பட்டபோது அதிலிருந்த வெடிமருந்து வெடித்ததாக தெரியவந்துள்ளது. 
இதுதொடர்பாக  பசுவின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது பக்கத்து வீட்டு நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் மற்றும் விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டுள்ள அந்நபர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என ஜன்துட்டா காவல்நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளதாக .என்.. முகமை செய்தி வெளியிட்டுள்ளது. 
மேலும் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொதுவாக காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக வைக்கப்படும் பொறியை சினைப் பசு தவறுதலாக சாப்பிட்டதாலேயே விபத்து நேர்ந்துள்ளதாக பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர் ஒருவர் கூறியுள்ளதாக .என்.. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
 சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள், அதாவது மே 26ஆம் திகதி அந்த மாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பசுவின் உடல்நிலையை கருத்திற்கொண்டு, பிரசவத்தை தூண்ட செய்ததில், காளைக் கன்று ஒன்றை அது ஈன்றுள்ளது. எனினும், வெடிபொருள் வெடித்ததில் பசுவின் தாடைகள் முற்றிலும் சிதைந்துவிட்டதால் அதனால் உணவு உட்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவுகிறது என அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள இந்த விவகாரத்தில் பலரும் JusticeforNandini என்ற ஹேஷ்டேக்கில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!