நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா, பீட்டர் போல் என்பவரை சமீபத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் பீட்டர் போலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், பீட்டர் போல் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.பீட்டர் போலுடன் திருமணமாகி தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் தனக்கு முறையாக விவாகரத்து வழங்காமல் வனிதாவை திருமணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 7 வருடங்களாக பிரிந்து வாழ்ந்ததாகவும், தனக்கு முறையாக விவாகரத்து வழங்கிய பின்னரே வனிதாவை திருமணம் செய்துகொள்வதாக பீட்டர் உறுதி அளித்ததாகவும் ஆனால் அவர் தற்போது உறுதியளித்ததற்கு மாறாக நடந்து கொண்டதாகவும் எலிசபெத் ஹெலன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.