இம்மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் பிறந்த தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் சீன ஜனாதிபதி கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக இலங்கை முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஜனாதிபதியின் வாழ்த்துக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்தார் அத்தோடு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்காக சீன அனுப்பி வைத்துள்ள உதவிப் பொருட்கள் தொடர்பான ஆவணம் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது இதனை அடுத்து கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தில் இலங்கையும் சீனாவும் ஒரே வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் நாட்டின் கொரோனா கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடிந்தது என்பதையும் இதில் குறிப்பிட்டதோடு நாட்டு பாதுகாப்பு படையினரின் உதவியுடன் மேற்படி அச்சுறுத்தலை வெற்றிகொள்ள முடிந்தது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்