ஆனால், எந்த நேரத்திலும் இது மனிதர்களைத் தாக்கலாம் என்ற ஆபத்து இருந்து வருகிறது.
இப்போது இது உடனடியான பிரச்சினை இல்லை என்றாலும், எதிர்வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இது மனிதர்களிடையே பரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
இக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது என ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.இது புதுவிதமான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள நோயெதிர்ப்புத் திறன் கண்டிப்பாக இருக்காது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இப்போது வரை இதனால் பேராபத்து ஏதும் இல்லை. ஆனால், இதனை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கிறார் இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் கிம் செள சாங். இந்த வைரஸை G4 EA H1N1 என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.