Monday, June 22, 2020

டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தை முறியடிக்க வித்தியாச முயற்சியை கையாண்ட டிக்டாக் இளைஞர்கள்



அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வாண்டு நடக்க இருக்கும் சூழலில் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். ஓக்லாஹாமாவில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை ஒருங்கிணைக்கப்பட்ட அவரது தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கூட்டம் சேருவதைத் தடுக்க டிக்டாக் பயனர்கள் ஒரு வித்தியாச முயற்சியைக் கையாண்டுள்ளனர்.
அதாவது, அவருக்கான தேர்தல் பிரசார கூட்டத்திற்கு முன்பதிவு செய்துவிட்டு, செல்லாமல் இருப்பது என முடிவு செய்து அதற்கான பிரச்சாரத்தை டிக்டாக் பயனாளர்கள் முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாகத்தான் சனிக்கிழமை நடந்த பிரசாரத்தில் அதிகம் கூட்டம் சேரவில்லை என்கின்றனர் அவர்கள். ஆனால் டிரம்ப் தரப்பு இதனை மறுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த எதிர்ப்பாளர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும். முன்பதிவின் போதே போலிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர் அவர்கள். தீயணைப்புத் துறையினர் 6000 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகம் பேர் கலந்து கொண்டதாகக் கூறுகிறது டிரம்ப் தரப்பு. 19,000 இருக்கைகள் அந்த வளாகத்தில் இருந்துள்ளது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!