Sunday, June 14, 2020

க.பொ.த உயர் தர பரீட்சை மீண்டும் பிற்போடப்படுவது குறித்து பரிசீலனை - டலஸ் அலகப்பெரும



க. பொ. த உயர்தர பரீட்சைகள் வருகின்ற செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்க உத்தேசித்திருந்த நிலையில், பல மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பரீட்சைகள் ஆரம்பிக்கும் திகதி குறித்து மறு பரிசீலனை செய்ய உள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

மேலும் கொவிட்-19 தொற்று காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறைகாலத்தோடு ஒப்பிடுகையில் உயர்தர பரீட்சைகள் ஒரு மாதகாலமே பிற்போடப்பட்டது.அது கற்றல் நடவடிக்கைகளுக்கு போதமானதாக இல்லை என மாணவர்களிடமிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையிலேயே பரிட்சை திகதி தொடர்பான மறுபரிசீலனை செய்ய உத்தேசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பரீட்சைகள் நடத்தப்பட வேண்டிய திகதி குறித்து பரிசீலனை செய்யுமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அது குறித்த முடிகள் விரைவில் எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் நாம் மாணவர்களுக்கு சாதகமாகவே சிந்திக்க வேண்டும் மாறாக அரசியல்வாதிகள் பக்கமோ நிர்வாகிகளின் பக்கமோ அல்ல என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!