2019 ஆம் ஆண்டு க. பொ. த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு.


 கடந்த வருடம் க. பொ. த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி இந்த வருடம் உயர்தர கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் கல்வி அமைச்சின் அனுமதியை பெற்ற பின்னரே எந்தவொரு பாடசாலையிலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கல்வி அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் குறித்த மாணவர்கள் அதற்கான ஒரு விண்ணப்ப படிவத்தினை இணையம்(online)   வாயிலாக பூரணப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை தொடர்பான அறிவுறுத்தல்கள் வருமாறு. 

* இந்த முறையின் அடிப்படையில் மாணவர் ஒருவருக்கு 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். 

*விண்ணப்பிக்க விரும்பும் ஒவ்வொரு பாடசாலைக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

*விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான இறுதி திகதி 12/06/2020

*விண்ணப்பங்களை கல்வி அமைச்சு குறித்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கும். 

*மாணவர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுமிடத்து சான்றிதழ்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன் தோற்ற வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர் நீங்கள் தொடர்புக்கான குறியெண் ஒன்றை பெறுவீர்கள். (தேவையேற்படுமிடத்து அதனை பயன்படுத்தவும்) 

* தமிழ் அல்லது சிங்களம் ஆகிய மொழிகளில் தரவுகளை உள்ளிடும் போது unicode எழுத்தை பயன்படுத்தவும்.

* விண்ணப்பங்களை அனுப்புவதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கவும். 

தொழினுட்ப – 077-5440083 / 077-2302382 /071-3723318

பிற -071-3251503 / 071-1936516/ 071-1932272/ 070-5629833/ 0774115407/ 070-1172476/ 071-5574958/ 071-3251503 / 071-1933371 
Tamil medium - 077-7859089/ 077-3750458

(2022 Batch) கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் 
கீழ் காணும் லிங்க் இனை பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும்.