கொழும்பு வைத்தியசாலையில் மேலதிக கொடுப்பனவு பணத்தை கொள்ளையடித்த நபரை மடக்கி பிடித்த பெண் பொலிஸ் அதிகாரியின் துணிச்சலுக்கு குவியும் பாராட்டுக்கள்!!!கொழும்பு தேசிய வைத்தியசாலை  உத்தியோகத்தர்களின் மேலதிக கொடுப்பனவு பணத்தை கொள்ளையிட்டு வீதியால் ஓடியவரை துரத்தி பிடித்த பெண் பொலிஸ் அதிகாரி!!!

நேற்று தமது தனிப்பட்ட தேவை நிமிர்த்தம் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி தமது குழந்தையுடன் சென்று கொண்டிருந்த போது
வழியில் கைத்துப்பாக்கியுடன் வீதியின் நடுவே ஓடிவந்த ஒரு சந்தேக நபரைப் பின்தொடர்ந்து மாத்தறை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரியான OIC, வருணி கேசலா போகாவட்டா மடக்கி பிடித்தார்.அவரிடமிருந்து வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் 79இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதன் போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிறப்பு வைத்தியராக  கடமை புரிந்த  ஒருவர் என அறியமுடிகின்றது .

மேலும் வருணி அவர்கள் இலங்கையின் மிகச் சிறந்த பெண் பொலிஸ் அதிகாரிகளில் ஒருவராக அறியப்படுகிறார். 

இதை நாம் பார்க்கும்போது, ​​உண்மையான பெண்ணியம் என்பது நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தன்மைகளில் ஒன்று எனவும்.  அதற்கு சான்றாக இவர்களை போன்ற ஆண்களுக்கு நிகராக எச்சூழ்நிலையிலும் பாதுகாப்பை வழங்குபவர்களையும் குறிப்பிடலாம்.

பல போராட்டங்களின் மத்தியில் வைத்தியசாலை ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு வந்தடைந்த போது அதனை கொள்ளையிடும் முயற்சியின் போது துணிகரமாக செயற்பட்டு தடுத்து நிறுத்திய பொலிஸ் அதிகாரி வருணியிற்கு அங்குள்ள தாதியர் செய்தி குழுமம் சார்பாக பாராட்டுக்களும் நன்றியும் குவிந்த வண்ணம் உள்ளது.