"FACEAPP" எனப்படும் செயலியை பயன்படுத்துவோருக்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்த செயலியானது ஆரம்பத்தில் பயனர்களின் முகங்களை இளமைமையாகவோ அல்லது முதுமை தோற்றமுடையதாகவோ மாற்றியமைப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டது.தற்போது இந்த செயலியில் ஆண் மற்றும் பெண் உருவம் போன்று மாற்றி அமைக்க கூடிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த செயலி தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
குறிப்பிட்ட செயலியில் ஒருவருடைய முகம் பயன்படுத்தப்படுவதால் அப்பயனாளரின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தன்மைக்கு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.
முகத்தை அடையாளம் காண்பதென்பது ஒரு கடவுச்சொல் (password) ஆக பயன்படுத்தும் தொழிநுட்பம் இருப்பதால் இரண்டாம் தரப்பினரிடையே இந்த முகங்களை பகிர்வது தொடர்பில் பயனாளர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என தகவல் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய செயலி ஒன்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு முன்னர் அதன் தனிப்பட்ட தன்மை மற்றும் கொள்கைகளை (privacy & policy) நன்கு ஆராய்ந்த பின்னரே பயன்படுத்த வேண்டும் என அவர்கள் மேலும் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.