பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய 1441 நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு இருவாரங்கள் உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 12 மணித்தியாலங்களுக்குள் குறித்த நபர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாணத்தில் 1280 பேர் விழிப்பூட்டும் வகையில் எச்சரிக்கப்பட்டு அனுப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் மேல் மாகாணத்தில் பொலிஸார் விஷேட நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.