தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நேர்காணலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியமையே எனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான சாதனையாக கருதுகின்றேன் என கூறியுள்ளார்.
அதாவது, நாட்டில் ஜனாதிபதி பதவிகளை வகித்தவர்கள், துணிச்சலான முடிவுகளை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அச்சம் கொண்டிருந்தனர். அவர்கள் வெளிநாட்டு அழுத்தங்களிற்கு அடிபணிந்தனர் என அவர் கூறியுள்ளார்.
மேலும் 30 வருடங்களிற்கு மேல் இந்த நாட்டை பாதித்து வந்த ஒரு சிக்கலை தீர்ப்பதற்கான அரசியல் உறுதிப்பாட்டினை என்னால் வழங்க முடிந்தமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் எனவும் கூறியுள்ளார்.
எனினும் தனது அரசியல் வாழ்க்கையில், தனக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம் 2015 தேர்தலில் தான் அடைந்த தோல்வியே ஆகும் என கூறியுள்ளார்.
இதேவேளை நாங்கள் வலுவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக எதிர்பார்த்துள்ளோம். ஆனாலும் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.