நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் ஆறு லட்சம் ரூபாவிற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு.நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் ஆறு லட்சம் ரூபாவிற்கு மட்டுமே இலங்கை மத்திய வங்கி பொறுப்பு சொல்லும் என அரசாங்கம் அறிவித்துள்ளது

இலங்கையில் உள்ள பலதரப்பட்ட நிதி நிறுவனங்களில் மக்கள் தங்கள் பணத்தை வைப்பு செய்து வருகின்றனர்.இவ்வாறு வைப்பு செய்யப்படும் பணத்தில் ஆறு லடசம் ரூபாவிற்கு மட்டுமே இலங்கை மத்திய வங்கி பொறுப்பு சொல்லும் என பந்துல குணவர்த்தன கருத்து வெளியிட்டுள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில் நாட்டின் நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்பிலிடுவோர், அந்த வைப்புத் தொகையில் எவ்வளவு தொகை மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்பது பற்றி அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என தாம் கருதுவதாக குறிப்பிட்டார்

நீண்ட காலமாக இலங்கையில் இயங்கிவந்த நிதி நிறுவனம் ஒன்று அன்மையில் திடீரென மூடப்பட்டதை தொடர்ந்து அந் நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டவர்கள் பெரும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

பெருந்தொகை பணத்தை நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்தவர்கள் அது பற்றி அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமானது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்