Tuesday, June 23, 2020

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய "கபாலி" குழுவின் உறுப்பினர் ஒருவர் கைது.


வீடுகளை கொள்ளையிடல்,மதுபோதையில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளல், வீதியில் செல்வோரை மிரட்டல் உள்ளிட்ட பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய "கபாலி" குழுவின் உறுப்பினர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் புதுக்குடியிருப்பு, உடயார்க்கட்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபரிடம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!