இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியியல் பிரிவு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தின்படி மாலியில் சேவையாற்றும் நமது இராணுவ வீரர்கள் பயன்படுத்துவதற்காக கவசவாகனங்களை தயாரித்துள்ளது.
இதற்கு முன்னர் 4 கோடி ரூபாய் செலவில் வெளிநாடுகளிலிருந்து கவசவாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இந்த கவசவாகனம் 1 கோடி ரூபா செலவில் இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியியல் பிரிவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் மேலும் இந்த வகை வாகனங்களை தயாரித்து வெளிநாடுகளின் இராணுவ பயன்பாட்டிற்காக ஏற்றுமதி செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றிகரமான முயற்சிக்கு இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியியல் பிரிவிற்கும் இலங்கை இராணுவத் தளபதிக்கும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.