Friday, June 5, 2020

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்..




எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நேற்று மாலை 5 மணிக்கு கையொப்பமிட்டுள்ளார்.


கொட்டகலையில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அனுஷியா சிவராஜா உப தலைவர் செந்தில் தொண்டமான் நிதிச் செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுரை உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கவிருந்த தலைமை வேட்பாளர் ஆறுமுகன் தொண்டமான் கடந்த 26 ஆம் திகதி மரணமடைந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவரின் மகனான ஜீவன் தொண்டமானை நியமிக்குமாறு கடந்த 27ஆம் திகதி பொது ஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொதுச் செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதத்தை கையளித்த நிலையில் மேற்படி கோரிக்கை  ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜீவன் தொண்டைமானிடம் கையொப்பம் பெறுவதற்காக பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் குழு வந்திருந்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!