Monday, June 29, 2020

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்.. முழு உலகையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்.


   
தான்சானியாவில் ஒரு இராட்சச நீல நிற கல் காரணமாக இளைஞர் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரராகி உள்ளார். இந்த செய்தி உலகம் முழுக்க பெரிய அளவில் பரவி வருகிறது.

தான்சானியா உலகில் இருக்கும் ஏழ்மையான நாடுகளில் ஒன்று. அங்கு இருக்கும் சுரங்களில் மரகத கற்கள் தொடங்கி தங்கம் வரை நிறைய கையிருப்பு உள்ளது.

ஆனால் இந்த மரகத கற்கள், வைரம் மற்றும் தங்கம் அனைத்தும் அங்கே அதிகமாக கடத்தப்படுகிறது. இதனால் அந்த நாட்டின் வளமும் அதிகமாக சுரண்டப்படுகிறது.

இந்த கடத்தலை தடுப்பதற்காக அந்த நாட்டில் சுரங்களை சுற்றி பெரிய அளவில் சுவர்கள் எழுப்பப்பட்டு உள்ளது. அதோடு அங்கு 2018ல் இருந்து தனியார் சுரங்கம் ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பலரும் தங்கள் வீட்டின் பின்புறத்திலேயே சுரங்கங்களை அமைத்து குழிகளை தோண்டி வருகிறார்கள். இதில் அவ்வப்போது தங்கம், வைரம் கிடைக்கும்.
 
இப்படி தங்கள் வீட்டு கொல்லையில் உள்ள சுரங்கங்களில் கிடைக்கும் பொருட்களை இவர்கள் அரசிடம் விற்று அதற்கு சன்மானம் பெறுவதும் வழக்கம். இப்படித்தான் ஒருவர் தான்சானியாவில் ஒரே நாள் இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.அதன்படி தான்சானியாவை சேர்ந்த சன்னியூ லைசார் தன்னுடைய கொல்லையில் பெரிய சுரங்கம் ஒன்றை தோண்டி அங்கு தங்கம், வைரம் தேடி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு அந்த இளைஞர் லைஸாருக்கு இரண்டு மரகத கற்கள் கிடைத்துள்ளது. கரு நீல நிறத்தில் இரண்டு கற்கள் கிடைத்துள்ளது. இதில் ஒரு கல் 10 கிலோவும், இன்னொரு கல் 5 கிலோவும் இருந்துள்ளது. தான்சானியாவில் கிடைத்த மிகப்பெரிய மரகத கல் இதுதான் என்கிறார்கள்.இதன் மதிப்பு சுமார் 25 கோடி ரூபாய் ஆகும்.

இந்த நிலையில் நேற்று தான்சானியா அரசு இந்த மரகத கல்லை லைஸாரிடம் இருந்து பெற்றுக்கொண்டது. அவருக்கு 25 கோடி ரூபாயை அந்நாட்டு அரசு நேற்று வழங்கியது. இதன் மூலம் ஒரே நாள் இரவில் இரண்டு கற்கள் மூலம் லைசார் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அவருக்கு அந்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!