50 சதவீதம் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு.பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் நாட்களில் அச்சிடப்படும் என அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே கூறியுள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படவுள்ளன.