சார்வாரி ஆண்டு ஆனி மாதம் (06) 21.06.2020 ஞாயிற்றுக் கிழமை. காலை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் ஆரம்பமாகி இலங்கையிலும் தோன்றுகிறது.
இதன் கால வரையறை காலை 10.25 மணி முதல் மதியம் 1.31மணி வரை ஆகும்.
பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள்
1. மிருகசீரிடம்
2. புனர்பூசம்
3. அவிட்டம்
4. திருவாதிரை
5. ரோஹிணி.
மேற்கண்ட நட்சத்திரக் காரர்கள் மற்றும் இதர நட்சத்திரக்காரர்கள் கிரகணம் ஆரம்பிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் ?
1.இறை வழிபாடுகளில் ஈடுபடவும்.
2. தீட்சை பெற்றவர்கள் இந்த கிரஹணத்தின் பொழுது அனுட்டான நியமனங்களை செய்ய வேண்டும்.
3.வீட்டில் இருக்கும் மற்றும் பயன்படுத்துகின்ற பொருட்களின் மீது தர்ப்பை புல்லை போட வேண்டும்.
4. கர்ப்பிணி பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரக்கூடாது.
5.கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை எதுவும் சாப்பிடாமல் மற்றும் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உத்தமம்.
6.கிரகணம் முடிந்த பிறகு தங்கள் இல்லத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
இத்தகவலை மற்றவர்களுக்கு அனுப்பி நாமும் பயன் பெறுவோமாக.