Sunday, June 14, 2020

போதைமருந்து கடத்தியதாக ஆஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ள சீனா.


கேம் கிலெஸ்பி என்ற அந்த நபர் 7.5 கிலோ போதை மருந்து கடத்தியதாக கடந்த 2013ஆம் ஆண்டு சீன விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அந்நபருக்கே தற்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை தீர்ப்பு வேதனையளிப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"மரண தண்டனை விதிப்பதற்கு எதிரான நிலைபாட்டை கொண்டது ஆஸ்திரேலியா. உலகம் முழுவதும் இவ்வாறு மரண தண்டனை விதிப்பது நீக்கப்பட வேண்டும் என்றே நினைக்கிறோம்" என அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கு போதை மருந்து கடத்தியதாக இதற்கு முன்பும் ஆஸ்திரேலியர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. அங்கு 10 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் தலைநகர் பெய்ஜிங்கைச் சேர்ந்தவர்கள்.
இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளை மீண்டும் திறக்க எடுக்கப்பட்ட முடிவை அந்நகர அதிகாரிகள் கைவிட்டுள்ளதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
56 நாட்கள் கழித்துக் கடந்த வியாழக்கிழமை அன்று பெய்ஜிங்கில் கொரோனா தொற்று மீண்டும் பதிவானது. வெள்ளிக்கிழமை அன்று மேலும் இரண்டு பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!