Sunday, June 21, 2020

உலகம் அபாய கட்டத்தை எதிர்நோக்கியுள்ளது - உலக சுகாதார ஸ்தாபனம் (WHO).



கொரோனா பெறுந்தொற்றின் புதிய அபாயமிக்க கட்டத்தை உலகம் எதிர்நோக்கியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொற்று தீவிரமாக பரவிவருகின்ற சூழ்நிலையில் உலக நாடுகள் தங்களின் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதால் மிகவும் அபாயகரமான நிலை தோன்றியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் "டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்" தெரிவித்துள்ளார்.

இதுவரை கொவிட் 19 நோய்த்தொற்றால் சர்வதேச ரீதியில் 8.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதோடு 4,54,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் பிரேஸிலில் மாத்திரம் 54,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் மொத்தமாக ஒரு மில்லியன் கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் அங்கு நேற்றுடன் தொடர்ச்சியாக நான்காவது நாளாக 1200 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49,000 ஆகவும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

அமெரிக்காவில் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 2 மில்லியனை தாண்டியுள்ளதாக அறியமுடிகின்றது. 

இந்தியாவில் மாத்திரம் கடந்த 24 மணித்தியாலங்களில் 14,516 பேருக்கு கொரோனா தொற்று உருதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாடு பூராகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,95,048 ஆக அதிகரித்துள்ளதாகவும், இவர்களில் 2,13,831 பேர் குணமடைந்து உள்ளதாகவும் 1,68,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. 



குறிப்பாக சீனாவில் மீண்டும் கொரோனா பரவி வருவதுடன் நேற்று முன்தினம் மேலும் 27 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.மேலும் அதற்கு முந்தைய தினம் 32 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!