Monday, June 8, 2020

இனவெறிக்கு எதிராக அமெரிக்காவில் நடந்துவரும் போராட்டத்தை அதிபர் டிரம்ப் கையாளும் விதத்தை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் உள்துறை செயலாளர் காலின் பாவெல் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறி செல்வதாகவும் சாடியுள்ளார்.


அமெரிக்க இராணுவத்தில் முன்னணி பொறுப்பிலிருந்து அதன் பின்னர் குடியரசு கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக மாறிய காலின் பாவெல்,போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தை அழைப்பேன் என டிரம்ப் கூறியதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஜோர்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் அமெரிக்காவில் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ள இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தை அழைப்பேன் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
மேலும் அவர் கூறுகையில் நம்மிடம் அரசியலமைப்பு சட்டம் உள்ளது.நாம்அதையே பின்பற்ற வேண்டும். ஆனால்,அதிபர் டிரம்ப் அதில் இருந்து திசை மாறிச்செல்கிறார் என பாவெல் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பும், காலின் பாவெலும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும்,எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனுக்கு தான் வாக்களிக்கப்போவதாகக் காலின் பாவெல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாவெல் ஒரு மிகைப்படுத்தி பேசக்கூடிய நபர் என அதிபர் டிரம்ப்பும் விமர்சித்துள்ளார்.


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!