சேவைப்பிரமாணத்தைத் தயாரிக்கும் பணிகளை விரைவுப்படுத்தவும் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு நிறுவன மட்டத்தில் தீர்வுகளக் கண்டறிவதற்கும் நான் பணிப்புரை விடுத்தேன்.
இலங்கை மதுவரி திணைக்களத்தின் தொழிற்சங்க கூட்டமைப்புடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் பயிலுனர்களைக்கொண்டு திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது குறித்தும் நாம் கவனம் செலுத்தினோம்.
நீண்டகாலமாக ஒரே பதவியில் சேவை செய்யும் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு முறைமையொன்றை அறிமுகப்படுத்தவும் கடமைகளை நிறைவேற்றும்போது பௌதீக வளப்பற்றாக்குறைக்கு தீர்வு வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கீழ் நிலை பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது, திறமைகள் இல்லாத குறைந்த வருமானம் பெறுவோருக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நான் குறிப்பிட்டேன்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எனது செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, மதுவரி ஆணையாளர் ஏ. போதரகம ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இந்த கலந்துரையடலில் பங்குபற்றினர்.