Tuesday, June 23, 2020

நீர்வீழ்ச்சியொன்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.



உள்நாட்டு உல்லாச பயணிகள் குழுவொன்று, நீர்வீழ்ச்சியொன்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, இளைஞரொருவர் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் வெள்ளவாயப்  பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவைச் சேர்ந்த தம்பிதுரை ரவிகரன் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமானவராவார்.

 
இவ் இளைஞன் வெலிமடையின் தனியார் நிறுவனமொன்றில் தொழில் செய்துவந்துள்ளார். அந் நிறுவனத்தின் இவ் இளைஞர் உட்பட ஏனைய இளைஞர்கள் 9 பேரும் இரு யுவதிகளுமாகபதினொருபேர் வெள்ளவாயாவிற்கு சுற்றுலாசென்றிருந்தனர்.

அப்பகுதியில் அலிகெட்டார நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் சென்ற இவர்கள், அந்நீர்வீழ்ச்சி தடாகத்தில் இறங்கிகுளித்தனர். அவ் வேளையில் குறிப்பிட்ட இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார். ஏனையவர்களின் பாரிய பிரயத்தனத்தினால் இளைஞன் மீட்கப்பட்டு,வெள்ளவாயா அரசினர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோதிலும் அவ் இளைஞனை பரிசோதித்த வைத்தியர்கள் அவ் இளைஞன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சடலம் தற்போது சட்டவைத்திய பரிசோதனைக்கென வெள்ளவாயா அரசினர் மருத்துவ மனைபிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளவாயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம். ரட்னாயக்க தலைமையிலான குழுவினர், மேற்படிகுழுவினர் தீவிரபுலன் விசாரணைகளைமேற்கொண்டுள்ளனர்.

குளிக்கச் சென்ற இளைஞர்களில் சிலர் மதுபோதையிலிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!