Sunday, June 14, 2020

அமெரிக்காவில் மற்றுமொரு கருப்பினத்தவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்


அமெரிக்காவில் ஜார்ஜ் ப்லோய்ட் என்ற கருப்பினத்தவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெரும் போராட்டம் நடந்த நிலையில் மற்றொரு கருப்பினத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதனை கண்டித்து மற்றுமொரு போராட்டம் துவங்கியுள்ளது.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள உணவகம் முன்பு ரேஷர்ட் புரூக்ஸ் என்ற கருப்பினத்தவர்  27 வயதுடைய இவர் நேற்று முன்தினம் ஜூன் 12ஆம் திகதி இரவு காரில் தூங்கிக்கொண்டிருந்தார் இதனால் வாடிக்கையாளர்கள் சாப்பிட வர முடியவில்லை என உணவக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் அங்கு வந்து அந்த இளைஞர் மது அருந்தியுள்ளாரா என சோதனை செய்ய முயன்றனர் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்துவிட்டார் மேலும் கைது செய்ய முற்படும்போது போலீசாரிடமிருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓட முயன்றார் அவரை போலீசார் பின்தொடர்ந்து போது புரூக்ஸ் சுட முயன்றார் இதனையடுத்து போலீசார் தம்மிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயமடைந்தார் இதில் படுகாயமடைந்த புரூக்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் இந்த மோதல் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகளும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து அட்லாண்டா நகர போலீஸ் தலைவர் எரிக்கா ஷீல்ட்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனை கண்டித்து அட்லாண்டா நகரில் போராட்டம் ஆரம்பித்துள்ளது பல இடங்களில் வீதிகளை மறித்து போராட்டம் நடந்து வருகிறது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!