சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஷசாங் மனோகரின் பதவி காலம் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில் புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்வதற்கான திகதி மற்றும் அது தொடர்பான நடைமுறைகளை அறிவிப்பதற்கு கலந்துரையாடல் ஒன்று காணொளி காட்சி தொழிநுட்பம் ஊடாக சர்வதேச கிரிக்கெட் சபையின் உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி பெயர் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.