தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு தொலைத்தொடர்புச்சேவைகளை வழங்கி கல்வித்துறைக்கு ஆதரவு வழங்குகிறது -டயலொக் நிறுவனம்


இலங்கையின் முதல்தர இணைய சேவை வழங்குனரான டயலொக் ஆஸியாட்டா ப்ரைவேட் லிமிடெட், Huawei மற்றும் Simsyn ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, கல்வி அமைச்சகத்தால்(MOE) தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு தொலைத்தொடர்பு தீர்வுகளை வழங்குவதன் மூலம் கல்வித்துறைக்கு தனது ஆதரவை தொடர்ந்து வழங்குகின்றது.
இது 2020 மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட நெனச 1377 தொலைதூர கல்வி முயற்சியின் விரிவாக்கமாகும்.கொவிட்-19 நெருக்கடியான காலத்தில், ஏனைய கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் கற்றல் செயற்பாடுகளுக்கு மாறாக இவ் நெனச கற்கை நெறியானது அனைத்து வலையமைப்பிலும் இலவசமாக அணுகக்கூடியதாக காணப்படுவதுடன்  இன்டர்நெட் தீர்வுகள் இன்றி பிள்ளைகள் தங்களுடைய பாடங்களை தொடர முடியாத சூழ்நிலையிலிருந்து விடுபட்டு அனைவரும் தங்களுடைய பாடங்களை தொடர்வதற்கான வாய்ப்பினை அளிக்கின்றது.
இந்த விசேட தீர்வானது, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் இருந்தும், classroom conference sessions மூலம் மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுடன் எந்தவொரு சாதனம் மற்றும் வலையமைப்பின் ஊடாகவும் எவ்விதமான கட்டணங்களும் இன்றி இணைந்துக்கொள்வதற்கான தொலைதூரக் கற்றல் வசதியினை வழங்குகின்றது.
ஸ்மார்ட்போன் அல்லது Laptop ஊடாக மாணவர்கள் இவ் இணையத்தை அணுகி பாட நெறிகளை கற்றுக்கொள்ளக்கூடியதோடு ஏனையவர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்களால் நடத்தப்படும் பாடங்களை ஒரு feature phone  அல்லது நிலையான தொலைபேசி ஊடாக எந்தவொரு  வலையமைப்பிலிருந்தும் 1377 துரித இலக்கத்திற்கு  அழைப்பினை ஏற்படுத்தி கட்டணம் இன்றி இணைந்துக்கொள்ள முடியும்.

இந்த தீர்வின் மூலம் 1377 துரித இலக்கத்தின் ஊடாக 48 மாணவர்கள் வரை இணைந்துக்கொள்ள முடிவதுடன், web portal ஊடாக 100 மாணவர்கள் வரை ஒரேநேரத்தில் இணைந்துக்கொள்ள முடியும். மொத்தத்தில், பாடசாலைகள் தனது பாட நெறிகளை எவ்வித தடைகளும் இன்றி 1377 துரித இலக்கம் மூலமும் இணையத்தின் மூலமும் இணைந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வழங்க முடியும். 100 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொலைதூரக் கல்வி தீர்வு, நாடு முழுவதும் உள்ள 1000 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது. இது தொடர்ந்து நடைபெறும் கோவிட்-19 தாக்கத்தைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாகும். பாடசாலைகளுக்கு தொலைதூரக் கல்விக்கான வசதிகளை வழங்குவதற்கான நீண்டகால நோக்குடன், இந்த முயற்சியானது மாணவர்களுக்கு சமமான கல்வி அணுகலை பெற்றுத்தருவதோடு அவர்களின் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கல்வியினை தொடர்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
மேலும் கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அலகபெரும கூறுகையில், இன்று இலங்கை கல்வி முறையின் ஒரு புதிய திருப்பு முனையை நாங்கள் காண்கின்றோம்.கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோயின் விளைவாக, கல்வி துறை வெகுவாக பாதிக்கப்பட்டு உலகின் அனைத்து நாடுகளும் சிறந்த தீர்வுகளை விரைவாக மேற்கொள்வதற்கான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.
கல்வித்துறையினை மேம்படுத்தவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டு தொலைதூரக் கல்வியைத் வலுவூட்டும் நோக்குடன் இலங்கை அரசாங்கத்திற்கு டயலொக் ஆஸியாட்டா ப்ரைவேட் லிமிடெட் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பல்வேறு ஊடகங்கள் மூலம் தொலைதூரக் கற்றல் ஊடாக மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். இருப்பினும், இலங்கை குடும்பங்களில் 30%க்கும் குறைவானவர்களே இணைய அணுகலைக் கொண்டுள்ளனர்.
டயலொக்குடன் இணைவதன் மூலம் ஏனைய மாணவர்களும் சாதாரண கையடக்க தொலைபேசியின் ஊடாக கற்றல் செயற்பாடுகளை அணுகிட முடியும். சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக இந்த வாய்ப்பினை பயன்படுத்தி டயலொக் நிறுவனத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த நெருக்கடியான காலத்தில் கல்வியானது அனைவராலும் அணுகக்கூடியது என்பதை உறுதி செய்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், "நாடு முழுவதிலும் உள்ள கல்வி அமைச்சின் 1000 பாடசாலைகளுக்கு அவர்களின் கல்வி முயற்சிகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த தேவையான கருவிகளைக் கொண்டு, உயர்தர கல்வியைப் பேணுதல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் கல்வி ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுடன் நாடு முழுவதும் உள்ள கல்வி அமைச்சின் பாடசாலைகளை ஆதரிப்பதற்காக தொலைத் தொடர்பு தீர்வுகளை நாங்கள் நெனச 1377 தொலைதூரக் கல்வி துரித இலக்கத்துடன் விரிவுபடுத்தினோம்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) மற்றும் அனைத்து வலையமைப்பின் ஊடாக எமது இந்த இலவச தொலைதூர கல்வி தீர்வினை அனைவருக்கும்  வழங்க உதவியமைக்காக இந்த சந்தர்ப்பத்தின் ஊடாக எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்”;” என குறிப்பிட்டார்.
டயலொக் ஆசிஆட்டாவின்; இந்த முயற்சியானது ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு (SDGs), இலக்கு எண் 4 - அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்விக்கு ஏற்ப அமைந்துள்ளது.  மேலதிகமாக, நிறுவனமானது நெனச முன் முயற்சியின் கீழ் நெனச TV, நெனச Smart School, நெனச App மற்றும் நெனச 1377 O/L துரித இலக்கம் ஆகிய பல கல்வி தளங்களையும் இயக்குகிறது.
ஒரு சவால் மிக்க நேரத்திற்கு மத்தியில் கல்வித் துறையை ஆதரித்தல், நாட்டின் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் முயற்சிகளில் ஒன்றிணைதல் டயலொக் ஆசிஆட்டாவின் மற்றொரு முயற்சியாகும். மேலும் இலங்கையில் உள்ள 15 மில்லியன் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்த படியே எப்போதும் இணைந்திருப்பதனை  உறுதிசெய்யும் முயற்சிகளில் ஒன்றாக அணுகக்கூடிய பலவிதமான e-Connect, e-Learn, e-Health, e-Tainment, e-Care மற்றும் e-Work solutions போன்றவற்றை (https://www.dialog.lk/home வழியாக அணுகலாம்) வழங்குகின்றது.
மேல் படம் : தொலைதூரக் கற்றல் தீர்வைப் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
கீழ் உள்ள படம்: இடமிருந்து வலம்: டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் நிலைபேண்தகு பிரிவு தலைவர் ~ரித ரத்வத்த, கல்வி அமைச்சின் (கல்வி தர மேம்பாடு) மேலதிக செயலாளர் H.U. பிரேமதிலக, கல்வி அமைச்சின் அமைச்சர் டல்லஸ் அலகப்பெரும, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, கல்வி அமைச்சின் ஆலோசகர் வைத்தியர் உபாலி செதார மற்றும் கல்வி அமைச்சின் (திட்டமிடல் மற்றும் செயல்திறன் ஆய்வு) மேலதிக செயலாளர் வைத்தியர் மதுரா வெஹல்ல