Saturday, June 13, 2020

மாதாந்த குத்தகை கடன் செலுத்தாத காரணத்தினால் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்க உத்தரவை மீறும் செயலாகும்:


குத்தகை (leasing) முறையில் வாகனங்களை கொள்வனவு செய்து தவணைக் கடன்களை (installment loan payments) செலுத்தத் தவறுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு குத்தகை வழங்கிய நிறுவனங்கள் (leasing companies) பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது.


அதனால் - ஒருபோதும் அதற்கு இடமளிக்க வேண்டாம் என்று நான் காவற்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

குத்தகை நிறுவனங்கள் (leasing companies) அவ்வாறு வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கு முன்னர் காவற்துறையினருக்குத் தெரியப்படுத்துவதில்லை.

காவற்துறையினரிடம் அவர்கள் முறையிடுவது - வாகனத்தைப் பறிமுதல் செய்ததன் பின்னரே ஆகும்.

பலவந்தமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய பறிமுதல்கள் சிலபோது பாரதூரமான வன்முறைக்கும் காரணமாகின்றதன.

எனவே - அவ்வாறு பறிமுதல் செய்ததன் பின்னர் நிறுவனங்களிடமிருந்து (leasing companies) கிடைக்கும் முறைப்பாடுகளை மறு அறிவித்தல் வரை ஏற்க வேண்டாம் என நான் பதில் காவற்துறை  மா அதிபர் சீ. டீ. விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

மேலும் - கடன் தவணை செலுத்தாமை பற்றி குத்தகை நிறுவனங்களில் இருந்து கிடைக்கப்பெறும் எந்தவொரு முறைப்பாட்டையும் - ஆறு மாத நிவாரண காலப்பகுதி நிறைவுபெறும் வரை பொறுப்பேற்க வேண்டாம் என்றும் நான் பணிப்புரை விடுத்தேன்.

கொவிட் 19 பரவலுடன் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு மக்கள் தரப்பினருக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களின் கீழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்களினால் செலுத்தப்படும் தவணைக் குத்தகைக் கடனை (installment loan payments) அறவிடுவது 6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

எனது செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட  சுற்றுநிருபத்தில் அது தொடர்பாகத் தெளிவாக்க் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட PS/CSA/18/2020 ஆம் இலக்க மேற்படி சுற்றுநிருபத்தின் 09வது பந்தியில் -

முச்சக்கர வண்டிகள், ட்ரக் வண்டிகள், பாடசாலை பேரூந்து வண்டிகள் மற்றும் சிற்றூர்திகள் (van), சுயதொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் மகிழூந்துகள் (car)  போன்ற சுயதொழில்களில் ஈடுபடும் பதினைந்து லட்சம் வாகனங்களுக்கு தவணை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

இவ்வாறு இருக்கையில் தவணை கடன் செலுத்தாததன் அடிப்படையில் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும் என நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

எனவே தவணைக் கடன் செலுத்தாததன் காரணமாக வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் நான் காவற்துறையினருக்குத் தெரிவித்துள்ளேன்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!