வெலிமடை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகதலாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரட்டைமாடி வீட்டுக்குள் வைத்தே (ஜூன்-12) 60 வயதுடைய குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். குடும்ப உறுப்பினர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்தே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.