Tuesday, June 16, 2020

ஒரு இலட்சம் இளைஞர்-யுவதிகளுக்கு தொழில் பயிற்சி ஆரம்பம்.

பல்துறை கலைஞர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்றுவிப்பு அதிகாரசபை தயாராகிறது.

இதற்காக இளைஞர்-யுவதிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இணைத்துக் கொள்ளப்படும் இளைஞர்யுவதிகளுக்காக 25 துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. ஆறு மாத காலம் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்னிலையில் கைச்சாத்தானது குறிப்பிடத்தக்கது

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!