இலங்கையில் முதல் தடவையாக நீருக்கு அடியில் நிர்மாணிக்கப்பட்ட அருங்காட்சியகம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவினால் காலி கடலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக கடற்படைத் தளபதியின் முழுமையான கண்காணிப்பின் கீழ் காலி கடலில் நீருக்கு அடியிலான இந்த அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய காலி கடற்கரையை மையப்படுத்தி இந்த அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடற்படையினால் நிர்மாணிக்கப்பட்ட உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நீருக்கு அடியிலான இந்த அருங்காட்சியகம் காலி துறைமுகத்தினுள் 50 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.