வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில்
ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக, வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களின்
செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டிருந்தது.
இந்த
நிலையில், தற்போது அதற்கான கால எல்லை மேலும்
நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்
அறிவித்துள்ளது.
இதன்படி,
மார்ச் 13 முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான
காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜூன் 30 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 3 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.