நேற்றிரவு திடீரென நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால்அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாமல் பலர் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
நுவரெலியா மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக இன்று அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வுட், டிக்கோய, மஸ்கெலிய, கொட்டகலை, நானுஓயா மற்றும் நுவரெலியா போன்ற நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதே நேரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவையொட்டி நகரமெங்கும் வெள்ளைக் கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
வீதிகளில் செல்லும் வாகனங்கள் பொலிசாரினால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன ,மரணச் சடங்கிற்கு பங்கு கொள்வதற்காக சென்ற பலரும் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.கொரோனா சுகாதாரப் பாதுகாப்பு காரணங்களுக்காகவே வெளியார் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதனால் மக்கள் மறைந்த அமைச்சரின் பூதவுடலை காணமுடியாமல் அதிர்ப்த்தி அடைந்து வீடுகளுக்கு செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.