இலங்கையில் மீண்டும் ஒரு சைபர் தாக்குதல்.இலங்கையில் மீண்டுமொரு சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலானது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின்  இணையத்தளங்கள் மீது நடத்தப்பட்டுள்ளது

இத்தாக்குதலை ஏற்கனவே அரச இணையதளங்களை சைபர் தாக்குதல் மூலம் முடக்கிய குழுவை சேர்ந்தவர்களே செய்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்தள்ளதாகவும் கடந்த மே 18 ஆம் திகதி நடைபெற்ற சைபர் தாக்குதலை நடத்திய குழுவினரே இதற்கும் காரணம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்