கொரோனா தொற்று காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில்
காலாவதியான சுற்றுலா விசாக்களுக்கான காலக்கெடுவை 3 மாதங்களுக்கு சவுதி அரசு
நீடித்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக சவுதியிலும் மார்ச் முதல் விமான நிலையங்கள்
மூடப்பட்டுள்ளன.
இதனால் சுற்றுலா விசாவில் சவுதிக்கு சென்றவர்கள் விசாவுக்கான
காலக்கெடு முடிந்ததும் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து
காலாவதியான விசாக்களுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சுற்றுலா விசா மூலம் அங்கு சென்றவர்கள் கூடுதலாக
மூன்று மாதம் சவுதியில் தங்கிக் கொள்ளலாம்.சவுதியில் வேலை செய்யும்
வெளிநாட்டவர்களுக்கான காலக்கெடு கடந்த மாதம் நீடிக்கப்பட்டது.பெப்ரவரி 24 முதல் மே
24 வரையான காலங்களில் சவுதியில் 3 மாதங்களுக்கு விசா நீடிக்கப்பட்டது.