பொதுத்தேர்தலை நடத்த இன்னும் மூன்று மாதகாலமாவது செல்லும் என எண்ணவேண்டியள்ளது-ஜனாதிபதி


தேர்தல் ஆணைக்குழு தலைவரின் கருத்துக்களை பார்க்கும் போது பொதுத் தேர்தலை நடத்த இன்னும் 3 மாதகாலமாவது செல்லுமென எண்ணவேண்டியள்ளதாக நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் 9 தொடக்கம் 11 வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்படுமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். அப்படியாயின் இன்னும் 3 மாதகாலங்களுக்கு தேர்தல் இழுபடப் போகிறது எனவும் ஏற்கனவே 3 மாதம் இழுபட்டதால் மொத்தமாக 6 மாதம் நாட்டின் பணிகள் தடைப்பட்டு கிடக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 மேலும் ஜனாதிபதி 5000 ரூபா கொடுப்பணவை வழங்கும் விடயத்தில் அரசியல் தலையீடுகள் இல்லையென்றும் சில அதிகாரிகளே ஒத்துழப்பை வழங்க மறுக்கின்றார்களென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.