சஜித் உடன் சேர்ந்து 99 பேரின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமை ரத்து..


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இல்லாமல் பிற கட்சிகளில் போட்டியிட வேட்புமனுக்களில் கையொப்பமிட்ட 99 பேரின் கட்சி அங்கத்துவத்தை இரத்துச் செய்ய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. கட்சியின் செயற்குழுவில் இன்று உரையாற்றிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கும் அந்த திட்டமும் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாதெனவும் தெரிவித்துள்ளார்.