கல்வி நிலையங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பான அட்டவணை வெளியீடு.
NewTamilNews.Com
May 28, 2020
0
Comments
கல்வி நிலையங்களை மீள ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது இதன்படி பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஜூன் 15ஆம் திகதிவரை ஆரம்பிக்க முடியாது என்றும் இவற்றை ஆகஸ்ட் 31 வரை ஆரம்பிப்பது மிகவும் அச்சுறுத்தலான செயற்பாடு என்றும் சுகாதார அமைச்சு வெளியிட்ட கால அட்டவணையின் மூலம் அறிய முடிகிறது.
ஆகஸ்ட் 31 வரை பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக செயற்பாடுகள் மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் 50
வீதத்திற்கும் குறைவான செயற்பாடுகளை கொண்டே ஆரம்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் வகுப்புக்களை பொருத்தவரை ஜூன் 22 வரை ஆரம்பிக்க முடியாது என்றும் ஜூன் 22 இற்கு பின்னர் ஆகஸ்ட் 31 வரை தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கும் அவ்வாறு ஆரம்பிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளன.