மலையக வரலாற்றில் இ.தொ.கா அசைக் கமுடியாத சம்ராஜ்ஜியம் அதன் அசை க்க முடியாத முடிக்குரிய இளவரசனா க இராமநாதன் இராஜேஸ்வரி தம்பதி களின் தவப்புதல்வனாய் ஆறுமுகன் தொண்டமான் 1964 ம் ஆண்டு மே 29ம் திகதி பிறந்தார்.
தனது 21வயதிலேயே மலையக மக்களின் அரசியல் சக்தியை வெல்வதற்காக ஆளுமைமிக்க தலைவன் 1985 காலப்பகதியில் அரசியலுக்குள் பிரவேசித்த ஆறுமுகன் தொண்டமான், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பிரத்தியேக செயலாளராக செயற்பட்டார்.
1994 ஆகஸ்ட் 16 இல் நடைபெற்றபொ துத்தேர்தலில் நுவரெலியா மாவட் டத்தில் களமிறங்கிய தொண்டமான்,75 ஆயிரத்து 297 விருப்பு வாககு பெற்று பாராளுமன்றம் தெரிவா னார்.
1999 ஒக்டோபர் 30 ஆம் திகதி சௌ மியமூர்த்தி தொண்டமான் உயிரிழந் ததையடுத்து இ.தொ.காவின் தலைமைப் பதவியை பொறுப்பேற்றார்.
அன்று முதல் இன்றுவரை பாராளுமன் ற உறுப்பினராக பதவி வகித்தார். ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணி ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிகாலத்திலும் கெ பினட் அமைச்சு பதவிகளை வகித்து ள்ளார்.
தொகுப்பு
ஷான் சதிஸ்