பொதுத்தேர்தலில் தந்தைக்கு பதிலாக மகன் களத்தில்...


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் மகன் ஜீவன் தொண்டமான் அவர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட வேட்பாளராக ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதனை இன்று அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மிக முக்கிய கூட்டம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட முடிவின் மூலமாக அறியமுடிகின்றது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய பிரதிநிதிகள் இன்று இதற்கான முடிவுவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது இது தொடர்பான ஏற்பாடுகள் குறித்தும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.