இலங்கையின் அதிவேக இணைய சேவையினை வழங்கும் SLT நிறுவனம் மீது சைபர் தாக்குதல்.

இலங்கையின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான சிறிலங்கா ரெலிகொம் தங்களது உள் சேவையகங்களில் ஒரு பிரிவில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக,அறிவுறுத்தியுள்ளது

மேலும் இது தொடர்பாக கூறுகையில், அவர்களின் விழிப்புடன் கூடிய ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் இந்த தாக்குதல் முயற்சியைக் கண்டறிந்ததாகவும் , ஆகவே சில சேவையகங்களை தாமதமின்றி நிறுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது

மேலும் இந்த சேவையகங்கள் தனிமைப்படுத்தப்பட்டு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், எஸ்.எல்.டி சேவைகளை வழங்க பயன்படும் எந்த அமைப்பிற்கும் எந்த பாதிப்பும் இல்லை எனவும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சேவைகளுக்கும் எந்த ஆபத்தும் இல்லை எனவும் மேலும் வாடிக்கையாளர் தகவல்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்


இப் பிரச்னைகளை நிவர்த்தி செய்ய கணினி வல்லுநர்கள் இந்த பிரச்சினையில் கலந்து கொண்டுள்ளதாகவும் , ஏற்கனவே அனைத்து பகுதிகளையும் அடையாளம் கண்டுள்ளதாகவும்  குறுகிய காலத்தில் எஸ். எல். டி உள் சேவைகள் மீட்டமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டனர்


கடந்த காலங்களில் தகவல் தொழிநுட்ப அமைப்புகளைத் தாக்குவதாக அறியப்பட்ட ransomware ‘REvil’ இலிருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இந்த இணைய தாக்குதல்களின் தற்போதைய விரோத தன்மையைக் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடிந்தவரை செயல்படுத்துமாறு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 
எஸ். எல். டி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.