பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவுறுத்தல்..
பல்கலைக்கழக நடவடிக்கைகளை வழமை நிலைக்கு கொண்டுவருவது தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்றைய தினம் (26.05.2020)  உயர் கல்வி தொழில் நுட்ப புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன அவர்கள் மற்றும் உயர் கல்வி தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க  அவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்கள் பல்கலைக்கழக ஆணைக்குழுவின் உபதலைவர் பேராசிரியர் திருமதி ஜெனிதா லியனகே ,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கத்தவர் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜெயவர்தன, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அங்கத்தவர் பேராசிரியர் பிரேம்குமார சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி பாலித்த குமாரசிங்க, அவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியாந்த பிரேமகுமார ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்தனர்.

கொரோனா தொற்று பரவுதலை அடுத்து பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட போதிலும் தொலைக் கல்வி முறையின் மூலம் தொடர்ச்சியாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி வழங்கக் கூடியதாக இருந்தது எமக்கு பாரியவு வெற்றியை தந்துள்ளது என்று கூறினர்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிர்காலத்தில் கணினி ஒன்றை பணம் செலுத்தி பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடு ஒன்றை பரிந்துரை செய்துள்ளதோடு இது பேச்சுவார்த்தை மட்டத்தில் இருப்பதாகவும், மேலும் மருத்துவபீடங்களில் இறுதி ஆண்டு பரீட்சை நடத்துவதற்கு மாணவர்கள் இவ்வருடம் ஜூன் மாதம் 15ஆம் திகதி மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப்பட உள்ளனர் என்றும் அவர்கள் கூறினர்.

இறுதியாண்டு மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னரே அவர்களுக்கான பரீட்சைகள் நடாத்தப்படும் என்றும் இதனைத் தொடர்ந்து இப்பரீட்சைகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில்  படிப்படியாக ஏனைய பீடங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தொலைக் கல்வி முறைமையை தொடர்ச்சியாக முன்னெடுக்க கூடிய நிலைமை உண்டு என்றும் பல்கலைக்கழக தரவு கட்டமைப்பிற்குள் இலவசமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்