மலையக பகுதியில் கரும்சிறுத்தை கண்டுபிடிப்பு.


இலங்கையின் மலையகப் பகுதிகளில் மாத்திரமே வாழும் ஒரு அரிய வகை கரும்சிறுத்தை நேன்றைய தினம்  மஸ்கெலியா, நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்ட பிரிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவனொளிபாத மலைப் பிரதேசத்தில் உள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இவ்வகையான கருசிறுத்தைகள் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டாலும் இதற்கு முன்னர் இவ்வகையான கரும்சிறுத்தைகள் கண்களுக்கு தென் படவில்லை என்றும் கூறினர்.

மேலும் காட்டு விலங்குகளிடமிருந்து காய்கறி தோட்டத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பியில் சிறுத்தை சிக்கியுள்ளதாக நல்லதண்ணி போலீசார் தெரிவிக்கின்றனர்.மேலும் போலீசார் சிறுத்தை தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை மருத்துவர்கள்   சிறுத்தைக்கு மயக்க மருந்து ஏற்றப்பட்ட ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தி சிறுத்தையை மீட்டுள்ளனர்